ஊழல் புகார் குறித்து முதலமைச்சருடன் விவாதம் நடத்த மு.க.ஸ்டாலின் 2 நிபந்தனைகள்

ஊழல் குறித்து நேருக்கு நேர் விவாதம் நடத்த தயாரா என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி விடுத்த சவாலை தாம் ஏற்க தயார் எனக் கூறியுள்ள திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், அதற்காக 2 நிபந்தனைகளையும் விதித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் சம்பந்திக்கு டெண்டர் கொடுத்த ஊழல் வழக்கை விசாரிக்க உச்சநீதிமன்றம் விதித்த தடையை நீக்க நடவடிக்கை எடுக்க வேண்டும், அமைச்சர்கள் மீதான ஊழல் புகார்களை விசாரிக்க ஆளுநரை அனுமதிக்க கோரி அமைச்சரவையில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்ற 2 நிபந்தனைகளை செய்து முடித்து விட்டு வந்தால், நேருக்கு நேர் விவாதம் நடத்தலாம் என ஸ்டாலின் கூறியுள்ளார்.
Comments