தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு கனமழை தொடரும்

0 3719
தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு கனமழை தொடரும்

தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்குக் கனமழை தொடரும் என்றும், அடுத்த 24 மணி நேரத்தில் ராமநாதபுரம், தூத்துக்குடி மாவட்டங்களில் கனமழை பெய்யக் கூடும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

வளிமண்டல மேலடுக்குச் சுழற்சி காரணமாகச் சிவகங்கை, விருதுநகர், புதுக்கோட்டை மற்றும் டெல்டா மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன மழையும், பிற மாவட்டங்களில் பெரும்பாலான இடங்களில் மிதமான மழையும் பெய்யக்கூடும் எனக் குறிப்பிட்டுள்ளது. நாளை நீலகிரி, கோவை, தேனி, திண்டுக்கல், மதுரை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய கன மழையும், பிற மாவட்டங்களில் பெரும்பாலான இடங்களில் மிதமான மழையும் பெய்யக்கூடும் எனக் குறிப்பிட்டுள்ளது.

ஒன்பதாம் தேதி டெல்டா மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய கன மழையும், பிற மாவட்டங்களில் பெரும்பாலான இடங்களில் மிதமான மழையும் பெய்யக்கூடும் எனக் குறிப்பிட்டுள்ளது. சென்னையில் அடுத்த இரு நாட்களில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், ஒரு சில பகுதிகளில் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் குறிப்பிட்டுள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் அதிக அளவாகக் கடலூர் மாவட்டம் மே.மாத்தூர், திண்டுக்கல் மாவட்டம் நத்தம் ஆகிய இடங்களில் 21 சென்டி மீட்டர் மழை பதிவாகியுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டம் ரிசிவந்தியத்தில் 19 சென்டிமீட்டரும், கடலூர் மாவட்டம் வேப்பூரில் 18 சென்டிமீட்டரும் மழை பதிவாகியுள்ளது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments