யுவராஜ் சாமியிடம் ரூ 1.5 கோடி பெற்றதாக எழுந்த புகாருக்கு நடிகை குட்டி ராதிகா மறுப்பு

0 1872

மோசடி வழக்கில் கைதான ஜோதிடர் யுவராஜ் சாமியிடம் இருந்து ஒன்றரை கோடி ரூபாய் பெற்றதாக வெளியான தகவலுக்கு நடிகை குட்டி ராதிகா மறுப்பு தெரிவித்துள்ளார்.

பெங்களூருவை சேர்ந்த யுவராஜ் சாமி என்பவர் ஆர்.எஸ்.எஸ். மற்றும் பா.ஜ.க தலைவர்களின் பெயரில் பணம் வசூலித்து மோசடி செய்த வழக்கில் கைது செய்யப்பட்டார்.  அவர் அளித்த வாக்குமூலத்தில் நடிகையும் முன்னாள் முதலமைச்சர் குமாரசாமியின் மனைவியுமான குட்டி ராதிகாவிடம் ஒன்றரை கோடி ரூபாயை கொடுத்ததாக தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், இது தொடர்பாக பேசிய குட்டி ராதிகா, தனது தந்தையின் நண்பரான யுவராஜ் சாமி, "நாட்டிய ராணி சாந்தலா" படத்தில் நடிப்பதற்காக 75 லட்சம் ரூபாய் அளித்ததாக தெரிவித்தார். இது தவிர தனக்கு வேறு தொகை எதையும் அவர் வழங்கவில்லை எனவும்  கூறினார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments