திரையரங்குகளில் 100 சதவித இருக்கைகளுக்கு அனுமதி வழங்கிய அரசாணையை ரத்து செய்யக்கோரி உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் முறையீடு

0 2156

திரையரங்குகளில் 100 சதவித இருக்கைகளுக்கு அனுமதி வழங்கிய  அரசாணையை ரத்து செய்யக்கோரி உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் முறையிடப்பட்டுள்ள நிலையில், மனுவாக தாக்கல் செய்தால் நாளை விசாரணைக்கு ஏற்பதாக நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பான மனுவில் தற்போது கொரோனா தொற்றுக் காலம் என்பதால், இந்த அறிவிப்பு மத்திய அரசின் பேரிடர் விதிகளுக்கு எதிரானது என்றும், அந்த அரசாணையை ரத்து செய்ய வேண்டும் எனவும் நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ், ஆனந்தி அமர்வு முன்பாக முறையிட்டனர்.   

இதனிடையே 100 சதவீத இருக்கைகளுடன் திரையரங்குகள் இயங்க அனுமதிக்கப்பட்டதை எதிர்த்த வழக்கை அவசர வழக்காக விசாரிக்க சென்னை உயர்நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments