பறவைக்காய்ச்சல் பரவலைத் தடுக்கத் தொற்று கண்டறியப்பட்ட 12 மையங்களை கண்காணிக்க மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல்

0 720
பறவைக்காய்ச்சல் பரவலைத் தடுக்கத் தொற்று கண்டறியப்பட்ட 12 மையங்களை கண்காணிக்க மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல்

பறவைக்காய்ச்சல் பரவலைத் தடுக்கத் தொற்று கண்டறியப்பட்ட 12 மையங்களைக் கண்காணிக்கும்படி மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.

இமாச்சலம், அரியானா, ராஜஸ்தான், மத்தியப்பிரதேசம், கேரளம் ஆகிய மாநிலங்களில் கடந்த சில நாட்களில் ஆயிரக்கணக்கான பறவைகள் செத்து மடிந்தன.

இந்நிலையில் மத்திய நலவாழ்வுத் துறைச் செயலர் இந்த மாநிலங்களின் தலைமைச் செயலர்களுக்கு எழுதியுள்ள கடிதத்தில் தொற்று கண்டறியப்பட்ட மையங்களில் தொற்று பரவாமல் தடுக்கக் கண்காணிப்பைத் தீவிரப்படுத்தும்படி அறிவுறுத்தியுள்ளார்.

ஏற்கெனவே கேரளத்தின் ஆலப்புழை, கோட்டயம், அரியானாவின் பஞ்ச்குலா மாவட்டங்களுக்குப் பன்முகத் தன்மை கொண்ட சிறப்புக் குழுக்கள் அனுப்பப்பட்டுள்ளன. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments