லோன் ஆப் மூலம் மோசடி செய்த வழக்கு - களமிறங்கிய அமலாக்கத்துறை

0 658
லோன் ஆப் மூலம் மோசடி செய்த வழக்கு - களமிறங்கிய அமலாக்கத்துறை

ன்லைன் மூலம் அதிக வட்டிக்கு உடனடி கடன் வழங்கி மோசடி செய்த சீனாவை சேர்ந்த கும்பல், பல ஆயிரம் கோடி ரூபாய் பணத்தை வெளிநாடுகளுக்கு பரிவர்த்தனை செய்தது கண்டுபிடிக்கப்பட்டதை அடுத்து, அமலாக்கத்துறை விசாரணையை தொடங்கியுள்ளது.

இந்த வழக்கில் சீனாவை சேர்ந்த 2 பேர் உட்பட 8 பேர் சமீபத்தில் சென்னை போலீசாரால் கைது செய்யப்பட்டனர்.

இதற்காக இந்தியாவில் பல கோடி ரூபாய் முதலீடு செய்துள்ள அந்த கும்பல், அதன் மூலம் கிடைக்கும் வட்டி வருவாயை வெளிநாடுகளுக்கும் சட்ட விரோதமாக பரிவர்த்தனை செய்ததும் கண்டுபிடிக்கப்பட்டது.

இதனையடுத்து, வழக்கு விவரம், ஆவணங்களை மத்திய குற்றப்பிரிவு போலீசார் அமலாக்கத்துறை வசம் ஒப்படைத்துள்ளனர். இதனிடையே கைது செய்யப்பட்ட சீனாவை சேர்ந்த இருவரை காவலில் எடுத்து விசாரிக்கவும் திட்டமிட்டுள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments