வெள்ளத்தில் சிக்கி 600 ஆடுகள் பலி... தலையில் அடித்துக் கொண்ட அழுத உரிமையாளர்கள்!

கள்ளக்குறிச்சி அருகே கனமழை காரணமாக வெள்ளத்தில் சிக்கி 600- க்கும் மேற்பட்ட ஆடுகள் உயிரிழந்த பரிதாப சம்பவம் நடந்துள்ளது.
கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அருகேயுள்ள பாவளம் கிராமத்தில் கருத்தா பிள்ளை, மற்றும் பழனி- அஞ்சலை ஆகியோருக்கு சொந்தமான ஆட்டுக் கொட்டகை உள்ளது. இங்கு சுமார் 600 செம்மறி ஆடுகளை வளர்க்கப்பட்டது. இந்த ஆடுகளை விற்றுதான் தங்கள் பிழைப்பை அவர்கள் நடத்தி வந்தனர்.
இந்த நிலையில், கள்ளக்குறிச்சி சுற்று வாட்டாரத்தில் கடந்த இரு நாள்களாக கன மழை பெய்து வருகிறது. அதிகப்படியாக சங்கராபுரம் பகுதியில் 10 செ.மீ மழை பெய்தது. இதனால், பாவளம் கிராமத்தில் உள்ள ஓடையில் வெள்ளம் ஏற்பட்டு, ஆட்டு கொட்டைகைக்குள் தண்ணீர் நுழைந்தது.
சுமார் 600 ஆடுகள் வெள்ளத்தில் சிக்கி பரிதாபமாக இறந்து போனதாக சொல்லப்படுகிறது. காலையில் ஆட்டு கொட்டகைக்கு வந்த கருத்தா பிள்ளை, பழனி, அஞ்சலை ஆகியோர் தங்கள் கொட்டகையில் ஆடுகள் இறந்து கிடப்பதை பார்த்து தலையில் அடித்துக் கொண்டு கதறி துடித்தனர்.
வெள்ளத்தில் பலியான 600 ஆடுகளின் மதிப்பு லட்சக்கணக்கில் இருக்குமென்று சொல்லப்படுகிறது. அக்கம் பக்கத்தினர் அவர்களுக்கு ஆறுதல் கூறி வருகின்றனர்.
Comments