ஆஸ்திரேலியாவில் சுற்றுலா பயணிகள் காருக்குள் நுழைய முயன்ற பாம்பு

ஆஸ்திரேலியாவில் சுற்றுலா பயணிகள் காரில் சென்று கொண்டிருந்த போது அழையா விருந்தாளியாக வந்த பாம்பைக் கண்டு பயந்த அவர்கள் அதனுடனும் பயணத்தைத் தொடர்ந்தனர்.
நியூ சவுத் வேல்ஸ் மாகாணத்தில் சில சுற்றுலா பயணிகள் காரில் சென்று கொண்டிருந்தனர்.
அப்போது காரின் பின்பக்கம் இருந்த கம்பி வலை வழியாக நுழைந்த பாம்பு ஒன்று பக்கவாட்டு ஜன்னல் வழியாக உள்ளே நுழைய முயன்றது.
பயமும், அதிர்ச்சியும் ஒன்று சேர பயணித்த அவர்கள் அதனை விரட்டி விட மனமின்றி பாம்புடன் சிறிது தூரம் பயணித்தனர்.
Comments