தமிழகத்தில் மழை நீடிக்கும்: வானிலை மையம் அறிவிப்பு

0 5140
தமிழகத்தில் மழை நீடிக்கும்: வானிலை மையம் அறிவிப்பு

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பெய்துள்ள நிலையில், 3 நாட்களுக்கு மழை நீடிக்கும் என வானிலை மையம் அறிவித்துள்ளது.

வளிமண்டல மேலடுக்குச் சுழற்சி காரணமாக கடந்த சில நாட்களாக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் பலத்த மழை பெய்து வருகிறது. சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் 2 நாட்களாக பலத்த மழை பெய்து வரும் நிலையில், நேற்று இரவும் பரவலாக மழை பெய்தது.

கோவையில் 3 மணி நேரத்துக்கும் அதிகமாக பெய்த கனமழையால் சாலைகளில் வெள்ளநீர் பெருக்கெடுத்து ஓடியது. அரசினர் கல்லூரி மாணவர் விடுதி அருகில் மரம் வேரோடு சாலையில் சாய்ந்ததால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. சிங்காநல்லூர், சிவானந்தா காலனி உள்ளிட்ட பகுதிகளில் வீடுகளுக்குள் வெள்ள நீர் புகுந்தது.

கணபதி பகுதியில் சாலையில் ஏற்பட்ட பள்ளத்தை சிறுமியும், சிறுவனும் சாலைத் தடுப்பு கொண்டு மூடிவிட்டுச் சென்றனர். மதுரை மாட்டுத்தாவணி, அண்ணாநகர், விரகனூர், திருப்பரங்குன்றம் உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பெய்தது.

திண்டுக்கல் மாவட்டம் நத்தத்தில் நேற்று ஒரே நாளில் 20 சென்டி மீட்டர் மழை பெய்துள்ளது. இதனிடையே, சென்னை வானிலை ஆய்வு மையம் விடுத்துள்ள செய்தி குறிப்பில், 3 நாட்களுக்கு மழை நீடிக்கும் என்று கூறப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments