2021-22 பட்ஜெட்: பொருளாதார வல்லுனர்களுடன் நாளை பிரதமர் மோடி ஆலோசனை

0 764

அடுத்த மாதம் முதல் தேதியன்று நாடாளுமன்றத்தில் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ள நிலையில், பிரதமர் மோடி நிதி ஆயோக் சார்பில் ஒருங்கிணைக்கப்படும் கூட்டத்தில் பொருளாதார வல்லுனர்களுடன் நாளை ((( வெள்ளிக்கிழமை) )) முக்கிய ஆலோசனை நடத்த உள்ளார். கொரோனா காலத்தில் ஏற்பட்ட தொழில் முடக்கம், வேலைவாய்ப்பின்மை, பொருளாதார சரிவு , பணவீக்கம் உள்ளிட்ட பல்வேறு முக்கியப் பிரச்சினைகள் குறித்து இக்கூட்டத்தில் ஆலோசிக்க திட்டமிடப்பட்டுள்ளது.ரிசர்வ் வங்கி, உலக வங்கி, பன்னாட்டு நிதியம் உள்ளிட்ட நிதி அமைப்புகள் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி குறித்து சாதகமான கணிப்புகளை வெளியிட்டுள்ள நிலையில் இந்த ஆலோசனைக் கூட்டம் அதிக முக்கியத்துவம் பெறுகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments