ஆப்பிரிக்க நாடுகளுக்கு இந்தியாவின் நிபந்தனையற்ற ஆதரவு தொடரும் - ஹர்ஷ் சிருங்கலா

0 888
ஆப்பிரிக்க நாடுகளுக்கு இந்தியாவின் நிபந்தனையற்ற ஆதரவு தொடரும் - ஹர்ஷ் சிருங்கலா

ஆப்பிரிக்காவுக்கு ஐ.நா.பாதுகாப்பு கவுன்சிலில் இருக்கை ஒதுக்கித் தர இந்தியா தனது ஆதரவைத் தெரிவித்துள்ளது. 

இதுகுறித்து ஐநா.பாதுகாப்பு கவுன்சில் ஏற்பாடு செய்திருந்த காணொலிக் கூட்டத்தில் பேசிய வெளியுறவுச் செயலாளர் ஹர்ஷ் சிருங்கலா, ஆப்பிரிக்க நாடுகளுக்கு இந்தியா தொடர்ந்து நிபந்தனையற்ற ஆதரவு அளிக்கும் என்றார்.

37 ஆப்பிரிக்க நாடுகளில் இந்தியா 189 வளர்ச்சித் திட்டங்களை மேற்கொண்டிருப்பதையும் சிருங்கலா சுட்டிக் காட்டினார். ஆப்பிரிக்க நாடுகளின் சூரிய ஒளி திட்டங்களுக்காக 1 புள்ளி ஏழு பில்லியன் டாலர் நிதியுதவியை இந்தியா அளித்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

இந்தியாவில் 50 ஆயிரம் ஆப்பிரிக்க மாணவர்களுக்கு கல்வி உதவித் தொகை அளிக்கப்பட்டிருப்பதாகவும் சிருங்கலா தமது உரையில் தெரிவித்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments