கொரோனா காற்றின் மூலமாக பரவுவதாக புதிய ஆய்வில் தகவல்

0 4536
கொரோனா காற்றின் மூலமாக பரவுவதாக புதிய ஆய்வில் தகவல்

கொரோனா தொற்று காற்று மூலமாகவே பரவுவதாக புதிய ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இதுவரை தும்மல், இருமல் , சளி, எச்சில் வழியாகத்தான் கொரோனா பரவுவதாக கூறப்பட்டது. 

பேசும் போது தெறிக்கும் துளிகள் வழியாகவும் கொரோனா அடுத்தவருக்குப் பரவுவதாக தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில்,
ஹைதராபாத் மற்றும் மொஹாலியில் நடைபெற்ற ஆய்வுகளில் புதிய தகவல்கள் வெளியாகியுள்ளன.

அருகில் இருப்பவர்களிடம் மட்டும் கொரோனா பரவும் என்று கூறப்பட்ட நிலையில், 20 நிமிடங்களில் சுமார் நான்கு அடி தூரம் வரை காற்றில் அதன் கிருமிகள் பரவுவதாக புதிய ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

அங்கு உள்ளவர்கள் முகக்கவசம் அணிந்திருந்தாலோ, இடைவெளியை கடைபிடித்து விலகி இருந்தாலோ தொற்று பரவும் ஆபத்து குறைகிறது என்றும் ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments