ஈஸ்வரா…. என்ன இது சிம்புக்கு வந்த சோதனை..! வீட்டை முற்றுகையிட்ட ரசிகர்கள்

0 8534
ஈஸ்வரா…. என்ன இது சிம்புக்கு வந்த சோதனை..! வீட்டை முற்றுகையிட்ட ரசிகர்கள்

பொங்கலுக்கு ஈஸ்வரன் படம் வெளியாக உள்ள நிலையில், நடிகர் சிலம்பரசன் வீட்டை ரசிகர்கள் முற்றுகையிட்ட சம்பவம் அரங்கேறியுள்ளது. ரசிகர் மன்றத்தில் தாங்கள் நிர்வாகிகளாக இருக்கிறோமா இல்லையா என்பது தெரியாமல், குழப்பத்தில் கூடிய ரசிகர்களின் பின்னணி குறித்து விவரிக்கின்றது இந்த செய்தி தொகுப்பு

நடிகர் சிம்பு நடித்துள்ள ஈஸ்வரன் படம் பொங்கலுக்கு வெளியாக உள்ளது. இந்த படம் சிம்புவுக்கு வெற்றியை தேடித்தரும் என்றும் ரசிகர்கள் நம்பி இருக்கும் நிலையில், படத்திற்காக பேனர் வைப்பது தொடங்கி, ரசிகர் மன்றக் காட்சி நடத்துவது வரை ரசிகர் மன்றங்களுக்கு சலுகை வழங்கப்படும் என்பதால், இடையில் சில காலமாக மன்றப் பணிகளை மேற்கொள்ளாமல் இருந்த சிம்பு ரசிகர்கள் பலருக்கு தாங்கள் மன்றத்தில் இருக்கிறோமா? இல்லையா? என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளது. சில மாவட்டங்களில் உள்ள மன்றத்திற்கு ஏற்கனவே நிர்வாகிகள் இருக்கும் நிலையில், புதிதாகவும் நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.

இந்த நிலையில் பொங்கலுக்கு வெளியாக உள்ள ஈஸ்வரன் படத்திற்கு வழக்கம் போல பேனர் வைத்து, பால் ஊற்றும் வேலைகளை செய்வது யார் என்பதில் அவர்களுக்கு குழப்பம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து தாங்கள் மன்ற பொறுப்பில் இருக்கிறோமா ? இல்லையா என்பதை தெரிந்து கொள்வதற்காக தியாகராய நகரில் உள்ள சிம்புவின் வீட்டிற்கு வந்துள்ளனர்.

வாசலிலேயே மணிக்கணக்கில் காத்திருந்த ரசிகர்களிடம், உரிய பதில் சொல்ல உள்ளே இருந்து ஆட்கள் யாரும் வெளியே வராததால், டி.ஆரோ,  சிலம்பரசனோ வந்து நல்ல பதில் தருவார்கள் என்று காத்திருந்தனர். ஆனால் அவர்கள் எதிர்பார்க்காத காவல்துறையினர் வந்து அவர்களை அங்கிருந்து கலைந்து போகச்செய்தனர்.

ரஜினி, விஜயைத் தொடர்ந்து சிம்புவுக்காக காத்திருக்கின்றனர் அவரது ரசிகர்கள்..! கொரோனா காலத்தில் நடிகர்கள் பலர் வீட்டுக்குள்ளேயே முடங்கிக் கிடந்த நிலையிலும், சூம் ஆப்பில் கதை கேட்ட சிம்பு, ஊரடங்குத் தளர்வு கிடைத்ததும் விரைவாக நடித்துக் கொடுத்த படம் ஈஸ்வரன் என்பது குறிப்பிடதக்கது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments