முதல்வருக்கு நன்றி தெரிவிக்கும் மாஸ்டர் படை..!படம் வருமா ? தடை வருமா ?

0 5378
முதல்வருக்கு நன்றி தெரிவிக்கும் மாஸ்டர் படை..!படம் வருமா ? தடை வருமா ?

தமிழக திரையரங்குகளில் 100 சதவீதம் இருக்கைகளில் ரசிகர்கள் அமர்ந்து படம் பார்ப்பதற்கு அளித்த அனுமதியை திரும்பப் பெற மத்திய அரசு அறிவுறுத்தியுள்ள நிலையில், முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமிக்கு நன்றி தெரிவித்து விஜய் ரசிகர்கள் போஸ்டர் ஒட்டியுள்ளனர். 

தமிழகத்தில் கொரோனா கால ஊரடங்கிற்கு பின்னர் திரையரங்குகள் திறக்கப்பட்டாலும், 50 சதவீத இருக்கைகளுடன் செயல்பட அனுமதி வழங்கப்பட்டிருந்ததால், நண்பர்களாகவும் ஜோடிகளாகவும் சேர்ந்து படம் பார்க்கச் செல்வோர் திரையரங்குகளில் பிரிந்து அமர வேண்டிய கட்டாயம் ஏற்பட்டதால் திரையரங்குகளில் எதிர்பார்த்த கூட்டம் வரவில்லை.

சூர்யாவின் சூரரைபோற்று ஓடிடியில் வெளியான நிலையில், முன்னணி நாயகர்களின் படங்கள் வந்தால் தான், இனி திரையரங்குகளுக்கு மக்கள் கூட்டம் வரும் என்ற நிலை உருவானது. இதையடுத்து விஜய்யின் மாஸ்டர், சிம்புவின் ஈஸ்வரன் படங்கள் பொங்கலுக்கு திரையிடப்படுவதாக அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில் திரையரங்கு உரிமையாளர்கள் மற்றும் நடிகர் விஜய்யின் கோரிக்கையை ஏற்று 100 சதவீத இருக்கைகளுடன் படங்களைத் திரையிட அனுமதி வழங்கப்பட்டது.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள புதுச்சேரியை சேர்ந்த மருத்துவர் ஒருவர், இது தற்கொலைக்கு சமம் என்று என்று எச்சரித்துள்ளதோடு, ரசிகர்களின் நலன் கருதி 100 சதவீத இருக்கை வேண்டாம் என்று நடிகர் விஜய்க்கும், சிம்புவுக்கும் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இதற்கிடையே மத்திய அரசின் உள்துறை அமைச்சகம், தமிழகத்தில் திரையரங்குகளுக்கு வழங்கப்பட்ட 100 சதவீத இருக்கை அனுமதியை மறுபரிசீலனை செய்ய அறிவுறுத்தியுள்ளது. இதனால் 100 சதவீத இருக்கை இல்லையென்றால் முன்னணி நாயகர்களின் படங்கள் வெளியாகுமா? என்ற சந்தேகம் எழுந்துள்ளது. இந்த நிலையில், நடிகர் விஜய்யின் கோரிக்கையை ஏற்றுக் கொண்ட முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமிக்கு நன்றி தெரிவித்து விஜய் ரசிகர்கள் வீதி வீதியாக போஸ்டர் ஒட்டி வருகின்றனர்

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments