மோசடியாக செயல்படும் 113 கடன் திட்ட செயலிகளை பயன்படுத்தாதீர் : தெலங்கானா காவல்துறை

0 2572

விதிமுறைகளை மீறி மோசடியாக செயல்படும் 113 கடன் திட்ட செயலிகளை பயன்படுத்த வேண்டாம் என தெலங்கானா காவல்துறை கூறியுள்ளது.

இந்த 113 செயலிகளை கூகுகள் பிளே ஸ்டோரில் இருந்து நீக்க வேண்டும் என தெலங்கானா காவல்துறை அறிவுறுத்தியிருந்த நிலையில், வெகுசில செயலிகளை மட்டுமே, கூகுள் நிறுவனம் நீக்கியதாக சர்ச்சை எழுந்திருக்கிறது.

ஐதராபாத், சைபராபாத், உள்ளிட்ட இடங்களில்,  கடன் செயலிகள் மீது, இதுவரையில், 50க்கும் மேற்பட்ட வழக்குகளை, தெலங்கானா காவல்துறை பதிவு செய்துள்ளது. கடன் மோசடி செயலிகள் என வகைப்படுத்தப்பட்ட 350 செயலிகளில், 113 மட்டுமே கூகுள் பிளே ஸ்டோரில் உள்ளன. எஞ்சியவை, செயலி என்ற பெயரில், லிங்குகளாக ஷேர் செய்து மோசடியில் ஈடுபட்டவை என, தெலங்கானா காவல்துறை தெரிவித்துள்ளது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments