சாலையை கடக்க முயன்ற இருசக்கர வாகன ஓட்டியை தூக்கிவீசிய கார், அடுத்தடுத்து 4 வாகனங்கள் மீது பாய்ந்தது

0 6622

தென்காசி மாவட்டம் பனைவடலி சத்திரத்தில், திடீரென சாலையை கடக்க முயன்ற இருசக்கர வாகன ஓட்டி மீது மோதிய கார், கண் இமைக்கும் நேரத்தில் அடுத்தடுத்து 4 வாகனங்கள் மீதும் மோதியது.

சங்கரன்கோவிலை சேர்ந்த மொய்தீன் பிச்சை என்பவர், தனது மாருதி சுவிப்ட் காரில் நெல்லை நோக்கி சென்று கொண்டிருந்தார். அவர் பனைவடலி சத்திரம் அருகே வந்த போது, அதே சாலையில் வந்து கொண்டிருந்த இருசக்கர வாகன ஓட்டி ஒருவர், கார் வருவதை கவனிக்காமல் திடீரென சாலையை கடக்க முயன்றார். இதனால் பைக் மீது கார் மோதியது.

இதனால், கட்டுப்பாட்டை இழந்த கார், சாலையின் ஓரமாக நின்ற இரு சக்கர வாகனங்கள் மீதும் மோதியது. விபத்து குறித்து பனைவடலி சத்திரம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments