இந்திய கடற்படைக்கு பீரங்கிகளை வழங்கும் அமெரிக்கா..!

0 2742
லடாக் எல்லை விவகாரத்தில் சீனாவுடன் மோதல் போக்கு நீடித்து வரும் நிலையில், இந்திய கடற்படைக்கு தேவையான பீரங்கிகளை அமெரிக்கா வழங்க இருக்கிறது.

லடாக் எல்லை விவகாரத்தில் சீனாவுடன் மோதல் போக்கு நீடித்து வரும் நிலையில், இந்திய கடற்படைக்கு தேவையான பீரங்கிகளை அமெரிக்கா வழங்க இருக்கிறது.

இந்திய கடற்படை கப்பல்களில் பயன்படுத்தும் விதத்தில் 127 எம்எம் அளவிலான 11 பீரங்கிகளை 3800 கோடி ரூபாய் மதிப்பில் அமெரிக்காவிடம் இருந்து வாங்க முடிவு செய்யப்பட்டது.

உடனடியாக பீரங்கிகளை அனுப்பி வைக்குமாறு இந்தியா தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டதை அடுத்து, அமெரிக்க கடற்படைக்காக இருப்பு வைக்கப்பட்டிருந்ததில் இருந்து முதல்கட்டமாக 3 பீரங்கிகளை அனுப்பி வைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

உற்பத்தி துவங்கிய பின்னர் எஞ்சிய பீரங்கிகளை இந்திய கடற்படைக்கு வழங்க அமெரிக்கா திட்டமிட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments