திரையரங்குகளில் நூறு சதவிகிதம் ரசிகர்களை அனுமதிக்கும் தமிழக அரசின் உத்தரவுக்கு மத்திய அரசு எதிர்ப்பு

0 4473
தமிழகத்தில் உள்ள திரையரங்குகளில் 100 சதவீத இருக்கைகளைப் பயன்படுத்த அரசு அனுமதி அளித்துள்ளதற்கு, மத்திய அரசு எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் உள்ள திரையரங்குகளில் 100 சதவீத இருக்கைகளைப் பயன்படுத்த அரசு அனுமதி அளித்துள்ளதற்கு, மத்திய அரசு எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக தமிழக தலைமைச் செயலாளர் சண்முகத்திற்கு, மத்திய உள்துறை செயலாளர் அஜய் பல்லா எழுதியுள்ள கடிதத்தில், திரையரங்குகளில் 50 சதவீத இருக்கைகளை பயன்படுத்த மட்டுமே உள்துறை அமைச்சகம் அனுமதி அளித்து உத்தரவிட்டு இருந்ததை சுட்டிக்காட்டி இருக்கிறார்.

இந்த சூழலில் 100 சதவீத இருக்கைகளை பயன்படுத்திக் கொள்ளலாம் என்ற தமிழக அரசின் அனுமதி, உள்துறை அமைச்சகத்தின் வழிகாட்டு நெறிமுறைகளை நீர்த்துப் போகச் செய்யும் என்று குறிப்பிட்டுள்ளார்.

எனவே மத்திய அரசின் கொரோனா வழிகாட்டு நெறிமுறையைப் பின்பற்றி, தமிழக அரசு தேவையான உத்தரவை உடனடியாக பிறப்பிக்க வேண்டும் என்றும் அஜய் பல்லா கேட்டுக்கொண்டுள்ளார்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments