ஜெர்மனியில் முழு ஊரடங்கு ஜனவரி 31-ம் தேதி வரை நீட்டிப்பு

0 2504
ஜெர்மனியில் அமல்படுத்தப்பட்டு உள்ள முழு ஊரடங்கு ஜனவரி 31-ம் தேதி வரை நீட்டிக்கப்படுவதாக அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.

ஜெர்மனியில் அமல்படுத்தப்பட்டு உள்ள முழு ஊரடங்கு ஜனவரி 31-ம் தேதி வரை நீட்டிக்கப்படுவதாக அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.

கொரோனா வைரசால் மிகவும் மோசமாக பாதிக்கப்பட்ட ஐரோப்பிய நாடுகளில் ஜெர்மனியும் ஒன்று. அங்கு கொரோனா வைரசின் 2-வது அலை வேகமாக பரவி வருகிறது. இதையடுத்து ஜெர்மனியில் மீண்டும் நாடு தழுவிய முழு ஊரடங்கை அமல்படுத்த அரசு முடிவு செய்தது. அதன்படி, ஜனவரி 10-ம் தேதி வரை ஊரடங்கு அமலில் உள்ளது.

இந்நிலையில், ஜெர்மனியில் அமலில் உள்ள முழு ஊரடங்கு ஜனவரி 31-ம் தேதி வரை நீட்டிக்கப்படும் என்றும் முழு ஊரடங்கை மிகவும் கடுமையாக கடைப்பிடிக்க அரசு முடிவு செய்துள்ளது என்றும் ஜெர்மனி பிரதமர் ஏஞ்சலா மெர்கல் தெரிவித்துள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments