உ.பி.யில் 50 வயது பெண்ணை பலாத்காரம் செய்து கொடூரமாக தாக்கி கொன்ற பயங்கரம்..இருவர் கைது,ஒருவனுக்கு வலை..!

உத்தர பிரதேசத்தில் அங்கன்வாடி பெண் ஊழியர் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கி கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அந்த மாநிலத்தின் பதுன் மாவட்டத்தைச் சேர்ந்த 50-வயதான அங்கன்வாடி பெண் ஊழியர் கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு வீட்டில் இருந்து கோவிலுக்கு சென்றார்.வீடு திரும்பிய அந்த பெண்ணை காரில் வந்த 3 பேர் கடத்தி சென்றனர். அவர்கள் காட்டுப்பகுதிக்கு கொண்டு பாலியல் வன்கொடுமை செய்தனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்த அவரை கொடூரமாக தாக்கியதில் அவரது இடுப்பு மற்றும் கால் எலும்புகள் முறிந்தன.
மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட சிறிது நேரத்திலேயே அவர் இறந்து விட்டார். இதுபற்றி போலீசில் விசாரணை நடத்தியதில் அந்தப்பகுதியைச் சேர்ந்த மகான்பாபா சத்திய நாராயணா, அவரது உதவியாளர் வேதராம், டிரைவர் ஜெயபால் ஆகியோர் இந்த கொடூர சம்பவத்தில் ஈடுபட்டது தெரிய வந்தது. அவர்களில் இருவரை போலீசார் கைது செய்துள்ளனர்.
Comments