காதல் விவகாரம் - பட்டப்பகலில் நடு ரோட்டில் இளைஞரின் முதுகில் கத்தியால் கிழிக்கப்பட்டு அரங்கேறிய கொடூரக் கொலை : கரூரில் அதிர்ச்சி சம்பவம்

0 23428

ரூரில் காதல் விவகாரத்தில் இளைஞர் கொல்லப்பட்ட வழக்கில் 3 பேர் கைது செய்யப்பட்டனர்.காமராஜ் சாலையை சேர்ந்த ஹரிகரன், அதே பகுதியை சேர்ந்த கல்லூரி மாணவியை 2 ஆண்டுகளாக காதலித்து வந்ததாக கூறப்படுகிறது.

கடந்த 2 மாதங்களாக மாணவி பேசுவதை தவிர்த்து வந்த நிலையில் ஹரிஹரன், அடிக்கடி தொல்லை கொடுத்ததாக சொல்லப்படுகிறது. இந்த நிலையில் மாணவி மூலம் பேச வைத்து ஹரிகரனை கல்யாண பசுபதீஸ்வரர் ஆலயம் முன்புறம் வரவைத்த உறவினர்கள் சரமாரியாக தாக்கினர்.

அதில் ஒருவர் தான் மறைத்து வைத்திருந்த  கத்தியால் முதுகில் குத்திக் கிழித்ததால் ஹரிஹரனுக்கு படுகாயம் ஏற்பட்டது. மருத்துவமனை செல்லும் வழியில் ஹரிஹரன் உயிரிழந்த நிலையில், மாணவியின் உறவினர்கள் 3 பேரை கைது செய்த போலீசார், மேலும் இருவரை தேடி வருகின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments