சைக்கிளில் சுமையுடன் பாலத்தில் ஏறிய தம்பதிக்கு உதவிய இருசக்கர வாகன ஓட்டியை டிவிட்டரில் பாராட்டி பதிவிட்டுள்ளார் வீரேந்திர சேவாக்

0 5426

சைக்களில் சுமையுடன் பாலத்தில் ஏற சிரமப்பட்ட தம்பதிக்கு உதவிய இருசக்கர வாகன ஓட்டிக்கு, முன்னாள் கிரிக்கெட் வீரர் வீரேந்திரசேவாக் பாராட்டு தெரிவித்துள்ளார்.

பாலம் ஒன்றில் மூன்று சக்கர சைக்கிளில் சுமையுடன் ஒரு தம்பதி சிரமப்பட்டு சென்று கொண்டிருந்ததைப் பார்த்த இருசக்கர வாகன ஓட்டி, நடந்து கொண்டே சைக்கிளை தள்ளி வந்த பெண்ணையும், அதன் மேல் உட்கார வைத்து தனது காலால் தள்ளி பாலத்தின் மேல் ஏற உதவி செய்தார்.

இந்த காட்சியை டிவிட்டரில் பகிர்ந்துள்ள வீரேந்திர சேவாக், மனித நேயம் நீண்ட காலம் வாழ்க என்று பதிவிட்டுள்ளார்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments