பட்டப்பகலில் சென்டர் மீடியனில் மோதி தலைக்குப்புற கவிழ்ந்த கார்

0 3143
சென்னை ராயபுரத்தில் சாலையின் சென்டர் மீடியனில் மோதி கார் ஒன்று தலைகுப்புற கவிழும் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன.

சென்னை ராயபுரத்தில் சாலையின் சென்டர் மீடியனில் மோதி கார் ஒன்று தலைகுப்புற கவிழும் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன.

பெரம்பூரை சேர்ந்த மணிராஜ் என்பவர் தனது போக்ஸ்வேகன் (Volkswagen) காரில் திருவொற்றியூர் நோக்கி சென்று கொண்டிருந்தார். அவர் ராயபுரம் ஜங்க் ஷன் பகுதியில் வந்த போது, அங்கிருந்த செண்டர் மீடியனில் காரின் டயர் மோதி தலைகுப்புற கவிழ்ந்தது.

காரை ஓட்டி வந்த மணிராஜ் லேசான காயத்துடன் உயிர் தப்பிய நிலையில், அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு முதலுதவி அளித்தனர். அந்த சாலை நீண்ட நாட்களுக்கு முன்பே ஒருவழிப்பாதையாக மாற்றப்பட்டுவிட்டதாக கூறியுள்ள அப்பகுதி மக்கள், சாலையின் நடுவே தேவையின்றி இருக்கும் செண்டர் மீடியனை அகற்ற வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments