இல்லத்தரசிகளுக்கு ஊதியம் என்பது நிகழ்ந்தே தீரும் - கமல்ஹாசன்

இல்லத்தரசிகளுக்கு ஊதியம் என்று சொன்னதும் கிண்டல் அடித்தார்கள் என்றும் இன்னமும் கிண்டல் அடிக்கிறார்கள் என்றும் ஆனால் அது நிகழ்ந்தே தீரும் என்றும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் கூறினார்.
“சீரமைப்போம் தமிழகத்தை” என்ற பெயரில் 4ஆம் கட்ட பிரச்சாரத்தை மேற்கொண்டுள்ள கமல், திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூரில் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார். அதன் பின்னர் குடியாத்தத்தில் மக்களிடையே உரையாற்றினார்.
Comments