வாழ்க்கையில் சவால்களை எதிர்த்துப் போரிடுவதுதான் உண்மையான வெற்றி-பிரதமர் மோடி

வாழ்க்கையில் சவால்களை எதிர்த்துப் போரிடுவதுதான் உண்மையான வெற்றி என்று பிரதமர் நரேந்திரமோடி தெரிவித்துள்ளார்.
வாழ்க்கையில் சவால்களை எதிர்த்துப் போரிடுவதுதான் உண்மையான வெற்றி என்று பிரதமர் நரேந்திரமோடி தெரிவித்துள்ளார்.
குஜராத் மாநிலம் சூரத்தை சேர்ந்த 23 வயதான வந்தனா என்ற பெண், வாய் பேச முடியாத, காது கேட்காத மாற்றுத்திறனாளி ஆவார். பிரதமர் படத்தை ரங்கோலி ஓவியத்தில் உருவாக்கி அவருக்கு அனுப்பி வைத்திருந்தார்.
அதற்கு வந்தனாவுக்கு பதிலளித்து கடிதம் எழுதியுள்ள பிரதமர் மோடி, வாழ்க்கையில் பாதகமான சூழ்நிலையிலும் மனம் தளராமல் தொடர்ந்து சவால்களை எதிர்த்து உறுதியுடன் போராடுவதில் தான் உண்மையான வெற்றி உள்ளது என்று குறிப்பிட்டுள்ளார்.
வந்தனாவின் கலைத் திறமைக்கு பாராட்டு தெரிவித்த பிரதமர், கல்வி மற்றும் கலையில் புதிய உச்சம் தொடுவார் என்றும் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
Comments