உருமாற்றம் பெற்ற கொரோனா பரவலை கட்டுப்படுத்த எடுத்த நடவடிக்கை குறித்து அறிக்கை தாக்கல் செய்ய மத்திய அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

0 1001

ந்தியாவில், உருமாற்றம் பெற்ற கொரோனா பரவலை கட்டுப்படுத்த எடுத்த நடவடிக்கைகள் குறித்து அறிக்கை தாக்கல் செய்ய மத்திய அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இதுதொடர்பான வழக்கு, தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி, நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, உருமாற்றம் பெற்ற கொரோனா பரவலை தடுக்க அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருவதாக மத்திய அரசுத்தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இந்த புதுவகை கொரோனா பரவலை கட்டுப்படுத்தவும், வெளிநாட்டு பயணிகளை தனிமைப்படுத்துவது குறித்து நிபுணர் குழு ஆலோசனைகளை பெறுவது பற்றியும், எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து, வருகிற 18ஆம் தேதிக்குள் அறிக்கைத் தாக்கல் செய்ய நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments