மூன்றாண்டுகளுக்கு முன் தனக்கு உணவில் நஞ்சு கலந்து தரப்பட்டதாக இஸ்ரோ விஞ்ஞானி அதிர்ச்சித் தகவல்

0 6708
இஸ்ரோ விஞ்ஞானி தபன் மிஸ்ரா, மூன்றாண்டுகளுக்கு முன் தனக்கு உணவில் நஞ்சு கலந்து தரப்பட்டதாக அதிர்ச்சித் தகவலைத் தெரிவித்துள்ளார்.

இஸ்ரோ விஞ்ஞானி தபன் மிஸ்ரா, மூன்றாண்டுகளுக்கு முன் தனக்கு உணவில் நஞ்சு கலந்து தரப்பட்டதாக அதிர்ச்சித் தகவலைத் தெரிவித்துள்ளார்.

2017ஆம் ஆண்டு மே 23ஆம் நாள் பெங்களூரில் உள்ள இஸ்ரோ தலைமையகத்தில் பதவி உயர்வுக்கான நேர்காணலில் தான் பங்கேற்றதாகத் தபன் மிஸ்ரா தெரிவித்துள்ளார்.

அப்போது தனக்குச் சிற்றுண்டியாக வழங்கப்பட்ட தோசைக்கு ஊற்றிய சட்டினியில் ஆர்சனிக் டிரையாக்சைடு என்னும் மெல்லக்கொல்லும் நஞ்சு கலக்கப்பட்டிருந்ததாகத் தெரிவித்தார்.

2017 ஜூலையில் தன்னைச் சந்தித்த உள்துறை அமைச்சகப் பாதுகாப்பு அதிகாரிகள், இதைத் தன்னிடம் கூறி மருத்துவர்களை அணுகச் சொன்னதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

தனது முகநூல் பக்கத்தில் நெடுநாளாகக் காத்த ரகசியம் என்னும் பெயரில் தபன் மிஸ்ரா வெளியிட்டுள்ள பதிவில் இந்தத் தகவலைத் தெரிவித்துள்ளார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments