நான்கு மாநிலங்களில் 12 பறவைக்காய்ச்சல் ஹாட்ஸ்பாட்டுகள்

0 1933
பறவைக் காய்ச்சலை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளுக்காக மத்திய அரசு டெல்லியில் கட்டுப்பாட்டு அறையை திறந்துள்ளது.

பறவைக் காய்ச்சலை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளுக்காக மத்திய அரசு டெல்லியில் கட்டுப்பாட்டு அறையை திறந்துள்ளது.

தினசரி அடிப்படையில், மாநிலங்களிடம் இருந்து பறவைக் காய்ச்சல் தொடர்பான விவரங்கள் பெறப்பட்டு, உரிய நடவடிக்கைகள் எடுக்க இது உதவிகரமாக இருக்கும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது. அதே போன்று 4 மாநிலங்களில் மொத்தம் 12 இடங்கள் பறவைக்காய்ச்சல் ஹாட்ஸ்பாட்டுகளாகவும் அடையாளம் காணப்பட்டுள்ளன.

அதன்படி ராஜஸ்தானில் பாரான், கோட்டா, ஜலவார் ஆகியன இடங்களிலும், மத்திய பிரதேசத்தில் மண்ட்சார், இந்தோர், மால்வா ஆகிய இடங்களிலும் காகங்களிடம் பறவைக் காய்ச்சல் கண்டறியப்பட்டுள்ளது.

இமாச்சல் பிரதேசத்தின் கங்க்ராவில் வலசை வரும் பறவைகளுக்கும், கேரளாவில் கோட்டயம் மற்றும் ஆலப்புழையில் கோழி, வாத்துகளிலும் பறவைக்காய்ச்சல் உறுதி செய்யப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments