சிட்னியில் ஆஸ்திரேலியாவிற்கு எதிராக விளையாடும் இந்திய அணியில் நடராஜனுக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை

ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் விளையாடும் இந்திய வீரர்களின் பட்டியலை பிசிசிஐ வெளியிட்டுள்ள நிலையில், தமிழக வீரர் நடராஜனுக்கு வாய்ப்பு அளிக்கப்படவில்லை .
ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் விளையாடும் இந்திய வீரர்களின் பட்டியலை பிசிசிஐ வெளியிட்டுள்ள நிலையில், தமிழக வீரர் நடராஜனுக்கு வாய்ப்பு அளிக்கப்படவில்லை .
இந்தியா-ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே 3வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி சிட்னியில் நாளை தொடங்குகிறது. இதனிடையே மூன்றாவது டெஸ்ட் போட்டிக்கான வீரர்களின் விவரங்களை பிசிசிஐ வெளியிட்டுள்ளது.
அதில் அஜிங்கா ரஹானே, ரோகித் ஷர்மா, சுப்மான் கில், புஜாரா, விஹாரி, ரிஷப் பந்த், ஜடேஜா, அஷ்வின், பும்ரா, சிராஜ், நவ்தீப் சைனி உள்ளிட்டோர் இடம் பெற்றுள்ளனர். நடராஜன் சேர்க்கப்படவில்லை.
Comments