'என்னை குடிகாரன் என்பதா? ' -ரசிகரிடத்தில் கொந்தளித்த நடிகர் மாதவன்

0 6680

தமிழ், இந்தி போன்ற பல திரைப்படங்களில் நடித்துள்ள நடிகர் மாதவனுக்கு என்று தனி ரசிகர் பட்டாளம் உண்டு. மாடலிங் துறையிலிருந்து சினிமாவுக்குள் நுழைந்த நடிகர் மாதவன் தன் பாடியை ஃபிட்டாக வைத்திருப்பார். தமிழில் மாதவன் நடித்த அலை பாயுதே, ரன் உள்ளிட்ட பல படங்கள் சூப்பர் டூப்பர் ஹிட்டாகின. தற்போது , தமிழிலில் அவ்வளவாக வாய்ப்பில்லாத மாதவன் இந்தி படங்களில் கவனம் செலுத்தி வருகிறார். 

சமீபத்தில் பாலிவுட் நடிகர் அமித் சாத் தன்னுடன் மாதவன் இருக்கும் புகைப்படத்தை ட்விட்டரில் பகிர்ந்தார். அதற்கு மாதவனின் ரசிகர் ஒருவர் கமெண்ட் செய்திருந்தார்.

அதில், தான் மாதவனின் மிகப்பெரிய ரசிகராக ஒரு காலத்தில் இருந்ததாக குறிப்பிட்டுள்ள அவர் , தற்பொழுது மாதவன் போதைக்கும் மதுவுக்கும் அடிமையாகி சினிமா வாழ்க்கையை பாழாக்கிக்கொண்டிருப்பதாக குற்றம் சாட்டியிருந்தார். மேலும், பாலிவுட்டில் கா ல்பதிக்கும் பொழுது கட்டிளம் காளை போல பொலிவுடன் இருந்த மாதவன் இப்பொழுது மது மற்றும் போதைக்கு அடிமையாகியுள்ளார் என்பதை அவரின் கண்களே காட்டுவதாகவும் அந்த ரசிகர் குற்றம் சாட்டியிருந்தார்.

ஆனால், ரசிகர் அளித்த இந்த கமென்டை மாதவன் ரசிக்கவில்லை. அந்த ரசிகருக்கு பதிலளித்துள்ள மாதவன், ரசிகரின் நோயறிதல் திறன் கண்டு வியப்பதாகவும் அவர் ஒரு நல்ல மருத்துவரிடம் சிகிச்சைக்கு செல்ல வேண்டுமென்றும் அதிரடியாக பதிலளித்தார்.

மாதவனின் இந்த பதில் சற்று நேரத்திலேயே சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவியது . இதனை தொடர்ந்து பல ரசிகர்கள் மாதவனுக்கு ஆதரவாக தங்கள் கருத்துக்களை வெளியிட்டு வருகின்றனர். அதில் ஒரு ரசிகர், இது போன்ற எதிர்மறை கருத்துக்களை மாதவன் புறந்தள்ள வேண்டும் என்றும், எப்பொழுதும் போல மாதவன் நல்ல ஆரோக்கியமுடன் தான் இருக்கிறார் என்றும் கூறியுள்ளார்.

மாதவன் நடித்துள்ள மாறா திரைப்படம் வருகின்ற 8 - ஆம் தேதி அமேசான் பிரைமில் வெளியாகவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments