வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக 8 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு - சென்னை வானிலை ஆய்வு மையம்

0 5320
வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, அடுத்த 24 மணி நேரத்திற்கு 8 மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, அடுத்த 24 மணி நேரத்திற்கு 8 மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

கடலூர், விழுப்புரத்தில் இடி, மின்னலுடன் கூடிய கன முதல் மிக கனமழையும், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், நீலகிரி, கோவை, தேனி, நாகை ஆகிய 6 மாவட்டங்களில் கனமழையும் பெய்யக்கூடும் என கூறப்பட்டுள்ளது.

சென்னை உட்பட ஏனைய பகுதிகளில் அநேக இடங்களில் மிதமான மழை பெய்யக்கூடும். மேலும், தமிழகத்தில் நாளை முதல் 4 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments