ரூ.50,000 கோடியில் ராணுவத்திற்கு 83 தேஜஸ் விமானங்களை வாங்க இந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் உடன் ஒப்பந்தம்

ரூ.50,000 கோடியில் ராணுவத்திற்கு 83 தேஜஸ் விமானங்களை வாங்க இந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் உடன் ஒப்பந்தம்
நீண்ட காலமாக நிலுவையில் உள்ள இரண்டு முக்கிய ராணுவ விமான கொள்முதல் ஒப்பந்தங்கள் இந்த ஆண்டு கையெழுத்தாக உள்ளன.
சுமார் 50 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான இந்த ஒப்பந்தங்களின்படி, இந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் நிறுவனத்திடம் இருந்து உள்நாட்டிலேயே தயாராகும் 83 தேஜஸ் போர் விமானங்கள் வாங்கப்படும்.
ஏற்கனவே ராணுவத்திடம் உள்ள தேஜஸ் விமானங்களை விட 43 அம்சங்கள் மேம்படுத்தப்பட்ட விமானங்களாக புதிய விமானங்கள் இருக்கும்.
இந்திய ராணுவ வரலாற்றில் இதுவே மிகவும் பெரிய உள்நாட்டு ராணுவ விமான கொள்முதலாகும். ஒப்பந்தம் கையெழுத்தாகி 3 வருடங்களில் இந்த விமானங்கள் டெலிவரி செய்யப்படும்.
மற்றோர் ஒப்பந்தத்தில், முதன் முறையாக, தனியாரிடம் இருந்து 56 சி.295 சரக்கு விமானங்கள் டாடா-ஏர்பஸ் கூட்டு முயற்சியில் உருவாக்கப்பட்டு வாங்கப்படும்.
Comments