இந்தியா-பிரிட்டன் விமான சேவை மீண்டும் துவக்கம்

இந்தியாவில் இருந்து பிரிட்டனுக்கு மீண்டும் விமான சேவை துவங்கியுள்ளது.
இந்தியாவில் இருந்து பிரிட்டனுக்கு மீண்டும் விமான சேவை துவங்கியுள்ளது.
பிரிட்டனில் மரபணு மாற்ற கொரோனா வைரஸ் பரவியதை தொடர்ந்து கடந்த 23 ஆம் தேதி முதல் அந்த நாட்டுக்கான விமான சேவையை இந்தியா நிறுத்தியது.
இந்த நிலையில் இன்று முதல் மீண்டும் பிரிட்டனுக்காக விமானங்கள் இயக்கப்படும் நிலையில் வாரந்தோறும் வழக்கமாக இயக்கப்படும் 60 விமானங்களுக்குப் பதிலாக 30 விமானங்கள் மட்டுமே இரண்டு மார்க்கங்களிலும் இயக்கப்பட உள்ளது.
கொரோனா தடுப்பூசிகள் தயாராகி விட்டதால், பிரிட்டனில் பரவும் மரபணு மாற்ற வைரசுகளால் இந்தியாவுக்கு பாதிப்பு ஏற்படாது என மருத்துவ நிபுணர்கள் கூறியதால் விமான சேவை அனுமதிக்கப்பட்டுள்ளது.
Comments