சென்னை மெரினா கடற்கரை அருகே படகு கவிழ்ந்து கடலில் தத்தளித்த 4 மீனவர்களை துரிதமாக மீட்ட தீயணைப்பு வீரர்கள்

0 1050
சென்னை மெரினா கடற்கரை அருகே படகு கவிழ்ந்து கடலில் தத்தளித்த 4 மீனவர்களை துரிதமாக மீட்ட தீயணைப்பு வீரர்கள்

சென்னை மெரினா கடற்கரை அருகே படகு கவிழ்ந்து கடலில் தத்தளித்த 4 மீனவர்களை தீயணைப்பு மீட்பு குழுவினர் பத்திரமாக மீட்டனர்.

சென்னையை சேர்ந்த மீனவர்கள் 4 பேர் பைபர் படகில் அதிகாலையில் மீன்பிடிக்க சென்றுவிட்டு காலை 9 மணி அளவில் மெரினா கடற்கரைக்கு திரும்பியுள்ளனர்.

வரும் வழியில் திடீரென எஞ்சின் பழுதானதால் கடல் அலையில் சிக்கி படகு கவிழ்ந்தது. இதனால் படகில் இருந்த மீனவர்கள் 4 பேரும் கடலில் தத்தளித்தனர்.

இதனையறிந்த தீயணைப்பு மீட்பு படையினர் உடனடியாக நவீன படகு மூலம் சென்று மீனவர்களை மீட்டு கரைக்கு கொண்டு வந்தனர்.

துரிதமாக செயல்பட்டு மீனவர்களை மீட்ட தீயணைப்பு மீட்பு குழுவினரை பாராட்டியுள்ள தீயணைப்பு துறை இயக்குநர் சைலேந்திரபாபு, அவர்களுக்கு தலா 10 ஆயிரம் ரூபாய் பரிசு வழங்க உத்தரவிட்டார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments