பொங்கலுக்கு பின், 10,12-ம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறப்பு ?

0 11024
பொங்கல் பண்டிகைக்கு பின், 10, 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகளை திறப்பது குறித்து, தமிழகம் முழுவதும் பெற்றோர்களிடம் கருத்து கேட்கும் கூட்டம் தொடங்கி நடைபெற்று வருகிறது.

பொங்கல் பண்டிகைக்கு பின், 10, 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகளை திறப்பது குறித்து, தமிழகம் முழுவதும் பெற்றோர்களிடம் கருத்து கேட்கும் கூட்டம் தொடங்கி நடைபெற்று வருகிறது.

இன்று முதல் 8-ம் தேதி வரை கருத்து கேட்பு கூட்டம் நடைபெறவுள்ளது.

பள்ளிகள் திறக்கும் மற்றும் வகுப்புகள் நடத்தப்படும் நேரத்தை அந்தந்த பள்ளிகளே முடிவு செய்து கொள்ளலாம் என பள்ளிக்கல்வித்துறை அறிவித்திருந்தது.

கருத்து கேட்பு கூட்டத்தில் பங்கேற்க வரும் பெற்றோர்கள் கட்டாயம் கொரோனா தடுப்பு வழிமுறைகளை பின்பற்ற அறிவுறுத்தப்பட்டுள்ளது.

பெற்றோர்களின் கருத்துக்களை அறிந்த பின்னரே பள்ளிகள் திறப்பு குறித்து முடிவு எடுக்கப்படும் என்று பள்ளிக் கல்வித் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments