புளியமரம் சாய்ந்து வாகன ஓட்டி சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பலி

கடலூரில் கனமழை காரணமாக சாலையோரமாக இருந்த புளியமரம் வேரோடு சாய்ந்து, அவ்வழியாக இருசக்கர வாகனத்தில் சென்றவர் மீது விழுந்ததில் அவர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பலியாகினார்.
கடலூரில் கனமழை காரணமாக சாலையோரமாக இருந்த புளியமரம் வேரோடு சாய்ந்து, அவ்வழியாக இருசக்கர வாகனத்தில் சென்றவர் மீது விழுந்ததில் அவர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பலியாகினார்.
கடலூர் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. இந்த நிலையில், கடலூர் - புதுச்சேரி சாலையில் ஆல்பேட்டை சோதனை சாவடி அருகே இருந்த புளியமரம் ஒன்று வேரோடு சாய்ந்து அவ்வழியாக பைக்கில் வந்து கொண்டிருந்தவர் மீது விழுந்தது.
தகவல் அறிந்து வந்த தீயணைப்பு துறையினர், மரத்துக்கு அடியில் சிக்கிய சடலத்தை மீட்டு, மரத்தை அகற்றும் பணியில் ஈடுபட்டுள்ளனர். உயிரிழந்தவர் சாவடியைச் சேர்ந்த குமணன் என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது.
Comments