காஷ்மீரில் பனிப்பொழிவால் சாலைகளில் பனி உறைந்து போக்குவரத்து பாதிப்பு

0 714
காஷ்மீரில் கடும் பனிப்பொழிவால் ஜம்மு - ஸ்ரீநகர் நெடுஞ்சாலை தொடர்ந்து நான்காம் நாளாக மூடப்பட்டுள்ளது.

காஷ்மீரில் கடும் பனிப்பொழிவால் ஜம்மு - ஸ்ரீநகர் நெடுஞ்சாலை தொடர்ந்து நான்காம் நாளாக மூடப்பட்டுள்ளது. 

நாட்டின் வட மாநிலங்களில் கடுங்குளிர் நிலவும் நிலையில், இமயமலைப் பகுதிகளில் பனிப்பொழிவு அதிகமுள்ளதால் தரையெங்கும் பனிமூடிக் கிடக்கிறது.

இந்நிலையில் காஷ்மீர்ப் பள்ளத்தாக்கை நாட்டின் பிற பகுதிகளுடன் இணைக்கும் ஜம்மு - ஸ்ரீநகர் நெடுஞ்சாலையில் பனிமூடியுள்ளதுடன், பல இடங்களில் பனிச்சரிவு ஏற்பட்டுள்ளது.

இதனால் இந்தச் சாலை தொடர்ந்து நான்கு நாட்களாக மூடப்பட்டுள்ளதால்  போக்குவரத்து முடங்கியுள்ளது. இதேபோல் ரஜோரி மாவட்டத்தில் தானாமண்டி - புப்லியாஸ் இடையே முகல் சாலை மூடப்பட்டுள்ளது.

தரை, கூரை, சாலை ஆகிய அனைத்தும் பனிமூடி வெண்மையாகக் காட்சியளிக்கிறது. வாகனங்களின் மீதும் ஓரடி உயரத்துக்குப் பனி உறைந்துள்ளது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments