டெல்லியில் விவசாயிகள் இன்று நடத்தவிருந்த டிராக்டர் பேரணி நாளை நடைபெறும் என அறிவிப்பு

டெல்லியில் விவசாயிகள் இன்று நடத்தவிருந்த டிராக்டர் பேரணி நாளை நடைபெறும் என அறிவிப்பு
டெல்லியில் விவசாயிகள் இன்று நடத்துவதாக இருந்த டிராக்டர் பேரணியை நாளை நடத்த உள்ளதாக அறிவித்துள்ளனர்.
புதிய வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெறுதல், குறைந்தபட்ச ஆதரவு விலை முறையை உறுதி செய்தல் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி விவசாயிகள் நவம்பர் 26 முதல் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
மூன்று சட்டங்களைத் திரும்பப் பெறும் வரை வீடு திரும்புவதில்லை என விவசாயிகள் கூறிவிட்டனர்.
தொடர் மழை காரணமாக இன்று நடத்துவதாக முன்பு அறிவித்திருந்த பேரணியை நாளை நடத்த உள்ளதாகத் தெரிவித்துள்ளனர்.
குடியரசு நாளன்று நடத்த உள்ள டிராக்டர் பேரணிக்கு இது முன்னோட்டமாக இருக்கும் என்றும் தெரிவித்துள்ளனர்.
Comments