சின்னத்திரை நடிகை சித்ராவின் மரண வழக்கு மத்திய குற்றப்பிரிவு போலீஸ் விசாரணைக்கு மாற்றம்

0 1792
சின்னத்திரை நடிகை சித்ராவின் மரண வழக்கு மத்திய குற்றப்பிரிவு போலீஸ் விசாரணைக்கு மாற்றம்

சின்னத்திரை நடிகை சித்ராவின் மரண வழக்கு மத்திய குற்றப்பிரிவு போலீஸ் விசாரணைக்கு மாற்றப்பட்டுள்ளது.

சித்ராவை தற்கொலைக்கு தூண்டியதாக அவரது கணவர் ஹேம்நாத்தை கைது செய்து நடத்தப்பட்ட விசாரணையில், 2015-ல் மருத்துவ சீட் வாங்கி தருவதாக 3 பேரிடம் தலா 35 லட்சம் ரூபாய் பணம் வாங்கி ஹேம்நாத் மோசடியில் ஈடுபட்டது கண்டுபிடிக்கப்பட்டது.

இந்த வழக்கில் மேற்கொண்டு விசாரணை நடத்த, சித்ரா வழக்கில் சிறையில் இருந்த ஹேம்நாத்தை மத்திய குற்றப்பிரிவு போலீசார் மீண்டும் கைது செய்தனர்.

இந்த நிலையில், சித்ராவின் மரண வழக்கும் மத்திய குற்றப்பிரிவு போலீசுக்கு மாற்றப்பட்டுள்ளது.

சித்ராவின் மரணம் குறித்து முழுமையான விசாரணை நடத்தக்கோரி அவரது பெற்றோர் முதலமைச்சர் தனிப்பிரிவில் சில நாட்களுக்கு முன் மனு அளித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments