டாடா, தைவான் நிறுவனங்கள் தமிழகத்தில் முதலீடு செய்ய உள்ளதாகத் தகவல்

டாடா, தைவான் நிறுவனங்கள் தமிழகத்தில் முதலீடு செய்ய உள்ளதாகத் தகவல்
தைவான் நாட்டின் பெகட்ரான் நிறுவனமும், டாடா நிறுவனமும் தமிழகத்தில் தொழிற்சாலைகளைத் தொடங்க உள்ளன.
மின்னணு துறையில் தடம் பதித்துள்ள இவ்விரு நிறுவனங்களும் ஆப்பிள் நிறுவனத்திற்கு தேவையான மின்னணு பொருளைத் தயாரிக்க ஆர்வம் கொண்டுள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது.
பெகட்ரான் நிறுவனம் சென்னைக்கு அருகே உள்ள மகேந்திரா சிட்டியில் ஆயிரத்து 200 கோடி ரூபாய் முதலீட்டில் தொழிற்சாலை தொடங்கவும், இதன் மூலம் 14 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு வழங்கவும் திட்டமிட்டுள்ளது.
டாடா நிறுவனம் சுமார் 5 ஆயிரம் கோடி ரூபாய் முதலீட்டில் கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் அருகே மின்னணு தொழிற்சாலை தொடங்கவும் அதன்மூலம் 18 ஆயிரம் பேருக்கு வேலை வழங்கவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது
பொங்கலுக்கு முன்பு இவ்விரு நிறுவனங்களும் தமிழக அரசுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்ய இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
Comments