பெற்ற தாயை மது போதையில் அடித்துக் கொன்ற மகன்..

திண்டுக்கல் மாவட்டம் ரெட்டியார்சத்திரம் அருகே பெற்ற தாயை மது போதையில் அடித்துக் கொன்ற மகன் கைது செய்யப்பட்டான்.
திண்டுக்கல் மாவட்டம் ரெட்டியார்சத்திரம் அருகே பெற்ற தாயை மது போதையில் அடித்துக் கொன்ற மகன் கைது செய்யப்பட்டான்.
தோப்புப்பட்டியை சேர்ந்த 71 வயதான முத்தம்மாள் என்ற மூதாட்டி தனியாக வசித்து வந்தார். இவருக்கும் மகன் ரத்தினவேலுவுக்கும் இடையே பல வருடங்களாக குடும்பத் தகராறு இருந்து வந்துள்ளது.
இந்த நிலையில், மதுபோதையில் இருந்த ரத்தினவேல் தாயுடன் ஏற்பட்ட தகராறில் அவரை கீழே தள்ளியதில் உயிரிழந்ததாகக் கூறப்படுகிறது. இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்த ரெட்டியார்சத்திரம் போலீசார் ரத்தினவேலை கைது செய்தனர்.
Comments