இலங்கை கடற்பரப்பு வழியாகக் கடத்தப்பட்ட போதைப் பொருட்கள் அந்நாட்டு அதிகாரிகளால் பறிமுதல்

0 691
இலங்கை கடற்பரப்பு வழியாகக் கடத்தப்பட்ட போதைப் பொருட்கள் அந்நாட்டு அதிகாரிகளால் பறிமுதல்

இலங்கை கடற்பரப்பு வழியாகக் கடத்தப்பட்ட 60 கோடி ரூபாய் மதிப்பிலான போதைப் பொருட்களை அந்நாட்டு அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர்.

ரகசியத் தகவலின் பேரில் இலங்கை கடற்படை, விமானப்படை மற்றும் காவல்துறையினர் இணைந்து நீர்கோம்பை கடல் பகுதியில் தேடுதல் வேட்டை நடத்தினர்.

அப்போது 100 கிலோ ஐசிஇ எனப்படும் கிரிஸ்டல் மெத்தாம்பேட்டமைன் மற்றும் 80 கிலோ எடை கொண்ட ஹஷிஷ் என்ற போதைப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

இவற்றுடன் போதைப் பொருளைக் கடத்தமுயன்ற இழுவைப் படகுகளையும் அதிகாரிகள் சிறைப்பிடித்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments