ராஜஸ்தானில் பயிற்சியில் ஈடுபட்டிருந்த மிக் 21 ரக விமானம் விழுந்து நொறுங்கியது

0 887
ராஜஸ்தானில் பயிற்சியில் ஈடுபட்டிருந்த மிக் 21 ரக போர் விமானம் விழுந்து நொறுங்கியது.

ராஜஸ்தானில் பயிற்சியில் ஈடுபட்டிருந்த மிக் 21 ரக போர் விமானம் விழுந்து நொறுங்கியது.

அம்மாநிலத்தின் மேற்கு பிராந்தியத்தில் உள்ள சூரத்கர் என்ற இடத்தில் இந்திய விமானப்படைக்குச் சொந்தமான மிக் 21 பைசன் ரக விமானம் நேற்று மாலை பயிற்சியில் ஈடுபட்டிருந்தது. அப்போது விமானத்தில் பெரிய அளவில் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டதில் விமானம் கீழே விழுந்து நொறுங்கியது.

பெரும் தீப்பிழம்புடன் விமானம் நொறுங்கிய நேரத்தில் விமானி அவசர வழி மூலம் வெளியேறினார். இதன் மூலம் அவர் காயங்களின்றி உயிர் தப்பினார். இதுகுறித்து விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளதாக இந்திய விமானப்படை தெரிவித்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments