மாரடைப்பால் பாதிக்கப்பட்ட பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலி நாளை டிஸ்சார்ஜ் செய்யப்படுகிறார்

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும், இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் தலைவருமான சவுரவ் கங்குலி நாளை டிஸ்சார்ஜ் செய்யப்படுவார் என மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும், இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் தலைவருமான சவுரவ் கங்குலி நாளை டிஸ்சார்ஜ் செய்யப்படுவார் என மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.
மாரடைப்பால் பாதிக்கப்பட்ட சவுரவ் கங்குலி கொல்கத்தாவில் உள்ள உட்லண்ட்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அவருக்கு ஆஞ்சியோ பிளாஸ்டி சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.
இதனையடுத்து உடல் நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதால் கங்குலி நலமுடன் இருப்பதாக தெரிவித்துள்ள மருத்துவமனை நிர்வாகம் அவர் நாளை வீடு திரும்புவார் என தெரிவித்துள்ளது.
Comments