காஷ்மீர் எல்லைப் பகுதியில் பாதுகாப்புப் படையினர் மீது தாக்குதல் நடத்த திட்டம்.. உளவுத்துறை எச்சரிக்கை

காஷ்மீரில் இந்திய எல்லைப் பாதுகாப்புப் படையினர் மீது தாக்குதல் நடத்த பாகிஸ்தான் உளவு அமைப்பான ஐஎஸ்ஐ, தீவிரவாதிகளைத் தயார் செய்து வருவதாக உளவுத்துறை எச்சரித்துள்ளது.
காஷ்மீரில் இந்திய எல்லைப் பாதுகாப்புப் படையினர் மீது தாக்குதல் நடத்த பாகிஸ்தான் உளவு அமைப்பான ஐஎஸ்ஐ, தீவிரவாதிகளைத் தயார் செய்து வருவதாக உளவுத்துறை எச்சரித்துள்ளது.
இதுகுறித்து உளவுத்துறை அளித்துள்ள அறிக்கையில், ஜம்மு பகுதியில் ஏற்கனவே 118 தீவிரவாதிகள் குழுவாக இருப்பதாகவும், அவர்களுக்குத் தேவையான குளிரைத் தாங்கும் ஆடைகள், ஜிபிஎஸ் மற்றும் வழிகாட்டும் கருவிகளை ஐஎஸ்ஐ அமைப்பு வழங்கியிருப்பதாகவும் தெரிவித்துள்ளது.
லூனியா தோக், பூஞ்ச், நவ்ஷாரா, சுந்தர்பாணி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் எல்லைக் கட்டுப்பாட்டுக் கோடு அருகே தீவிரவாதிகள் காத்திருப்பதாகவும், எல்லைப் பாதுகாப்புப் படையினர் எச்சரிக்கையுடன் இருக்குமாறும் உளவுத்துறை தெரிவித்துள்ளது.
Comments