தமிழகத்தில் அடுத்த 4 நாட்களுக்கு கனமழை நீடிக்கும் - சென்னை வானிலை ஆய்வு மையம்

0 3404
தமிழகத்தில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக அடுத்த 4 நாட்களுக்கு நீடிக்கும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக அடுத்த 4 நாட்களுக்கு மழை நீடிக்கும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், நீலகிரி, கடலூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, விழுப்புரம் உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதுபோல் விழுப்புரம், செங்கல்பட்டு,காஞ்சிபுரம், சென்னை, ராணிப்பேட்டை,திருவண்ணாமலை, திருவள்ளூர் ஆகிய 7 மாவட்டங்களில் இன்றும் மழை நீடிக்கும் என அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

7 மற்றும் 8 ஆம் தேதிகளில் தமிழகம், புதுச்சேரியில் அனேக இடங்களில் லேசானது முதல் மிதமானது வரையிலான மழை பெய்யக்கூடுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.

9 ஆம் தேதி அன்று தென் தமிழகத்தின் ஓரிரு இடங்களில் கனமழையும், ஏனைய மாவட்டங்களில் லேசானது முதல் மிதமானது வரையிலான மழை பெய்யக்கூடும் என்று சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.  

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments