அடுத்தவாரம் முதல் நாடுமுழுவதும் கொரோனா தடுப்பூசி போடப்படும் - மத்திய அரசு

0 1896
நாடு முழுவதும் அடுத்தவாரம் கொரோனா தடுப்பூசி போடப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது. முதற்கட்டமாக யார் யாருக்கு எந்தெந்த நாட்களில் தடுப்பூசி போடுவது என்ற பட்டியலையும் மத்திய அரசு தயாரித்துள்ளது.

நாடு முழுவதும் அடுத்தவாரம் கொரோனா தடுப்பூசி போடப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது. முதற்கட்டமாக யார் யாருக்கு எந்தெந்த நாட்களில் தடுப்பூசி போடுவது என்ற பட்டியலையும் மத்திய அரசு தயாரித்துள்ளது. 

இந்தியாவில், ஆக்ஸ்போர்டு-அஸ்ட்ராஜெனெகாவின் கோவிஷீல்டு மற்றும் பாரத் பயோடெக்கின் கோவேக்சின் ஆகிய இரண்டு தடுப்பூசிகளுக்கு தேசிய மருந்து ஒழுங்குமுறை ஆணையம் ஒப்புதல் அளித்துள்ளது. நடப்பாண்டின் முதல் பாதியில், இந்தியாவில் 30 கோடிப்பேருக்கு கொரோனா தடுப்பு மருந்தை வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் நாடுமுழுவதும் அடுத்தவாரம் முதல் கொரோனா தடுப்பூசி போடப்படும் என மத்திய அரசு தெரிவித்திருக்கிறது. முதல் கட்டமாக யார் யாருக்கு எந்தெந்த நாட்களில் தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும் என்பதற்கான பட்டியலையும் மத்திய அரசு தயாரித்துள்ளது.

அதன்படி, மருத்துவத் துறை மற்றும் காவல்துறை, ராணுவத் துறையைச் சேர்ந்த முன்கள பணியாளர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்படும். அதேபோல், கோவின் செயலிமூலம் தடுப்பூசி செலுத்திக்கொள்ள பதிவுசெய்தவர்களுக்கும் வரும் 13ம் தேதி முதல் தடுப்பூசி செலுத்தும் பணியை தொடங்கவேண்டும் என்றும், இதுகுறித்து மாநில வாரியான விவரப் பட்டியல்கள் விரைவில் வெளியிடப்படும் என்றும் மத்திய சுகாதாரத் துறை தெரிவித்திருக்கிறது.

கொரோனா தடுப்பு மருந்து தயாரிக்கும் நிறுவனங்களிடம் இருந்து நேரடியாக கர்னால், மும்பை, சென்னை மற்றும் கொல்கத்தாவில் அமைக்கப்பட்டுள்ள கிட்டங்கிகளுக்கு மருந்துகள் அனுப்பி வைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பின்னர் இவை நாடு முழுவதும் உள்ள 37 மாநிலங்களுக்கு பிரித்து வழங்கப்பட உள்ளன. அதனைத் தொடர்ந்து மருந்து தேவைப்படும் மாவட்டத் தலைநகரங்களும், அதற்கு அடுத்தபடியாக ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு மருந்துகள் கொண்டு செல்லப்பட்டு தேவைப்படுபவர்களுக்கு தடுப்பூசியைப் போட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments