தமிழகத்தில் கொரோனா பரிசோதனைக்கான கட்டணம் குறைப்பு

கொரோனா பரிசோதனைக்கான கட்டணத்தை 3000 ரூபாயில் இருந்து 1200 ரூபாயாக தமிழக அரசு குறைத்துள்ளது.
கொரோனா பரிசோதனைக்கான கட்டணத்தை 3000 ரூபாயில் இருந்து 1200 ரூபாயாக தமிழக அரசு குறைத்துள்ளது.
இதுகுறித்து சுகாதாரத்துறை விடுத்துள்ள செய்தி குறிப்பில், தமிழகத்தில் 67 அரசு மற்றும் 174 தனியார் ஆய்வகங்களில் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்படுவதாக கூறப்பட்டுள்ளது. இதில் ஆர்.டி.-பி.சி.ஆர். பரிசோதனைக்கு தனியார் ஆய்வகங்களில் இதுவரை வசூலிக்கப்பட்ட 3000 ஆயிரம் ரூபாய் கட்டணம் 1200 ரூபாய் குறைக்கப்படுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
தமிழக முதல்வரின் விரிவான காப்பீட்டு திட்டத்தில் 2500 ரூபாயாக இருந்த கட்டணம் 800 ரூபாயாக குறைக்கப்படுவதாகவும், இந்த உத்தரவானது கடந்த 4 ஆம் தேதி முதல் அமலுக்கு வந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Comments