பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சனின் இந்தியா வருகை ரத்து, அதற்கு பிரதமர் மோடியிடம் வருத்தம் தெரிவித்தார் போரிஸ் ஜான்சன்

0 2276

பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் இந்திய பயணத்தை ரத்து செய்துள்ளார். இந்திய குடியரசு தின விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொள்ள வருமாறு பிரதமர் மோடி விடுத்த அழைப்பை போரிஸ் ஜான்சன் ஏற்றிருந்தார். 

இந்த நிலையில் பிரதமர் மோடியை காலையில் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசிய ஜான்சன், திட்டமிட்டபடி இந்தியா வர முடியவில்லை என்பதற்காக தனது வருத்தத்தை தெரிவித்துள்ளார்.

பிரிட்டனில் நாடு தழுவிய ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில், வேகமாக பரவி வரும் புதிய கொரோனா வைரஸ் தொற்றை கட்டுப்படுத்த பிரிட்டனில் பிரதமர் இருப்பது அவசியம் என்பதால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக அவரது அலுவலகம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments