மழை,குளிரால் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகள் அவதி

டெல்லி-அரியானா எல்லையில் பெய்துவரும் மழையால் போராட்டத்தில் ஈடுபட்டுவரும் விவசாயிகள் அவதிக்கு உள்ளாகியுள்ளனர்.
டெல்லி-அரியானா எல்லையில் பெய்துவரும் மழையால் போராட்டத்தில் ஈடுபட்டுவரும் விவசாயிகள் அவதிக்கு உள்ளாகியுள்ளனர்.
மத்திய அரசு கொண்டு வந்துள்ள விவசாய சட்டங்களை திரும்பப் பெறக்கோரி டெல்லி எல்லையில் 41 வது நாளாக விவசாயிகளின் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
விவசாயிகள் போராட்டத்தை முடிவுக்கு கொண்டுவர மத்திய அரசு மேற்கொண்ட 7 கட்ட பேச்சுவார்த்தையும் தோல்வியில் முடிந்துள்ளது. டெல்லியில் கடந்த சில நாட்களாக கடுமையான பனிப்பொழிவு நிலவி வரும், நிலையில், இன்று அதிகாலை முதலே மழை பெய்து வருகிறது. விவசாயிகள் அமைத்துள்ள தற்காலிக கூடாரங்களுக்குள் மழை நீர் புகுந்தது.
மழை தொடர்ந்து பெய்துவருவதாலும், கடுமையான குளிராலும் போராட்டம் நடத்தி வரும் விவசாயிகள் அவதிக்கு ஆளாகி உள்ளனர்.
Comments